சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு குடும்பத்தை போன்றது - அஜின்கியா ரஹானே.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 

இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த ரகானே 27 பந்துகளில் (3 சிக்ஸர் & 7 பவுண்டரி) 61 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த போட்டிக்கு பேட்டியளித்த அஜின்கியா ரகானே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எப்படி மரியாதை கொடுப்பார்கள் என பல வீரர்கள், இதற்கு முன்பே என்னிடம் தெரிவித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு குடும்பத்தை போன்றது. 

கேப்டன் தோனி தலைமையில் பல போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தலைமையின் கீழ் விளையாடியது இதுவே முதல்முறை. அணியில் உள்ள சிறப்பான சூழல் போட்டிகளில் நேர்த்தியாக விளையாட உதவுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajinkya Rahane speech about CSK team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->