சைமண்ட்ஸ் உயிரிழப்பு - அதிர்ச்சியில் இந்திய அணியின் வீரர் போட்ட டிவிட்.! இந்த ஆண்டில் 3 முன்னாள் வீரர்கள் பலி.! சோகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (AndrewSymonds Age 46 ) கார் விபத்தில் பலியானார்.

நேற்றிரவு ஆஸ்திரேலிய டவுன்வில்லே பகுதிக்கு அருகே ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்தார். 

ஆண்ட்ரூ சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி என 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியா அணிக்காக 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,088 ரன்கள் சேர்த்துள்ளார். 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

ஆஸ்திரேலியா அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 1,462 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில் ஆண்ட்ரூ சைமண்ட்சின் கார் ஹெர்வி ரேஞ்ச் பகுதிக்கு வந்தபோது சாலையை விட்டு விலகி விபத்தில் சிக்கியது. காரில் அவர் ஒருவர் மட்டுமே பயணம் செய்துள்ளார். 

விபத்தில் காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலனில்லை. அவர் உயிர் பிரிந்தது.

இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் உயிரிழந்த நிலையில், நேற்று சைமண்ட்சும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய அணி வீரர் ஷிகர் தவான் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்,

"இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்பதுயுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள். இறைவன் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andrew Symonds dead in car accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->