புரோ கபடி சீசன் 10 : முதல்முறையாக இறுதிப்போட்டியில் அடியெடுத்து வைக்கும் அரியானா ஸ்டீலர்ஸ்.! - Seithipunal
Seithipunal


புரோ கபடி 10-வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த போட்டியில் பங்கேற்ற 12 அணிகள் தங்களுக்குள் தலா இரு முறை மோதின. இதன் முடிவில், டாப்-2 இடங்களை பிடித்த புனேரி பால்டன், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரையிறுதிசுற்றை எட்டின. 

3 முதல் 6-வது இடத்தை பெற்ற அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் பாட்னா பைரட்ஸ், தபாங் டெல்லியையும், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறின. இந்தநிலையில், நேற்றிரவு ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புனே அணி, பாட்னா பைரேட்சை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

மற்றொரு அரையிறுதியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, அரியானா ஸ்டீலர்சுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டெல்லர்ஸ் 31-27 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூருக்கு அதிர்ச்சி அளித்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இதைத் தொடர்ந்து, இதே மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் இறுதி ஆட்டத்தில் புனேரி பால்டன்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் போட்டியிட உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyana steelars selected pro kabbadi final


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->