#ஆசிய கோப்பை : டாஸில் வைத்த டிவிட்ஸ்ட்.! இந்தியாvsபாகிஸ்தான் ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு! யாருக்கு?
Asia Cup 2022 ind vs pak
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கி ஆட உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற ஆட்டம் என்றாலே இருநாட்டு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாகவே அமையும்.
தற்போது இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம், ஐசிசி உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் மட்டுமே நடக்கிறது. இந்த காரணமாக கூட, இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் பலத்த எதிர்பார்ப்புடன் நடப்பது வழக்கம்.
அந்த வகையில் இன்றைய ஆட்டமும் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் நடக்க உள்ளது. இந்த ஆட்டத்தை காண்பதற்காக சுமார் 4 மணி நேரத்துக்கு முன்னதாகவே, 40 டிகிரி செல்சியஸ் வெயிலை பொறுத்துக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் அணி ரசிகர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்யக்கூடிய அணிக்கே நல்ல வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி, டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ்கான்.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா. தஹானி