ஆசியக் கோப்பை : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு - அதிர்ச்சியில் இலங்கை வீரர்கள்!
asia cup 2022 SRIvsAFG
ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வீரர்கள், மூன்றாம் நடுவரின் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்ததது. இதனையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. அப்போது, முதல் ஓவரை வீசிய ஃபரூக்கி இலங்கை அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஃபரூக்கியின் முதல் ஓவரில் குசால் மெண்டிஸ் மற்றும் சாரித் அசலங்கா விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இதன் பின்னர், பதும் நிசங்கா வீக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், இலங்கை அணி அடுத்த ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது.
இருப்பினும் பதும் நிசங்கா நடுவரின் முடிவை ரிவியூ செய்து பார்க்கும் போது, பந்து பேட்டில் படாமல் சென்றதுபோல் தெரிந்தது. இதனால் இலங்கை அணி நிம்மதியடைந்தது. இந்த நிலையில், மூன்றாம் நடுவர் அவுட் என அறிவித்தார்.
இதனால், இலங்கை அணியினர் மட்டுமின்றி மைதானத்தில் இருந்த இலங்கை அணியின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மூன்றாம் நடுவரின் இந்த தீர்ப்பு இலங்கை அணிக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 106 ரன்கள் சேர்த்தது, அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி
10.1 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.