#WTC_DAY3 || ஜடேஜாவின் சூழலில் சிக்கி தடுமாறும் ஆஸ்திரேலியா.. 3ம் நாள் ஆட்டம் நிறைவு..!!
Australia scored 123 runs for 4 wickets end of day3
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸ் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் களம் இறங்கிய இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினர். பொறுப்புடன் அடைய அஜின்கிய ரகானே 89 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து ஷர்துல் தாகூர் 51 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் பேட் கம்மிங்ஸ் 3 விக்கெட்களும், மிச்சர் ஸ்டாக், ஸ்காட் போலேன்ட், கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை அடுத்து 3வது இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலில் தடுமாறத் தொடங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் ஒரு ரன்னில் வெளியேற அடுத்து கவாஜா 13 ரன்களுக்கு வெளியேறினார். மேலும் முதல் இன்னிங்ஸில் சதம் விலாசிய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிரேவிஸ் ஹெட் ஆகியோர் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்து வெளியேறியதால் ஆஸ்திரேலியா அணி தடுமாற தொடங்கியுள்ளது.
மூன்றாம் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டைகளை வீழ்த்தியுள்ளார். நான்காம் நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்க ஆஸ்திரேலியா அணி நிலைத்து ஆட முயன்றாலும் விரைந்து விக்கெட் எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இந்திய அணி உள்ளது. இதன் காரணமாக பெரும் எதிர்பார்ப்புடன் 4ம் நாள் ஆட்டம் நாளை துவங்க உள்ளது.
English Summary
Australia scored 123 runs for 4 wickets end of day3