ஐசிசி தொடர்களின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே அணி.. சாதனை படைத்த ஆஸ்திரேலியா.! - Seithipunal
Seithipunal


உலக பெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் இன்று வரை நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் தடுமாறி 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் 173 ரன்களுடன் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.‌

இதன் மூலம் இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணி நேற்று நான்காம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து இன்று கடைசி நாள் தொடங்கிய நிலையில் இந்திய வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இறுதியாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்கள் ஆல் அவுட்டானது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி இதுவரை வென்ற சாம்பியன் பட்டங்கள்

50 ஓவர் உலகக்கோப்பை (5)  - 1987, 1999, 2003, 2007, 2015

சாம்பியன்ஸ் டிராபி (2) - 2006, 2009

20 ஓவர் உலகக்கோப்பை (1) - 2021

டெஸ்ட் சாம்பியன்ஷிப் (1) - 2023


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia won all ICC trophys


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->