டி20 சாதனை மன்னன் கிறிஸ் கெய்லின் முறியடிக்க முடியாத சாதனையை, முறியடித்து சாதனை செய்த வீரர்!
babar azam breaks chris gayle T20 record
டி20 கிரிக்கெட்டில் 9000 ரன்களை விரைவாக எடுத்த வீரர்களின் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி, முதலிடம் பிடித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம்.
மொத்தம் 249 இன்னிங்ஸில் பாபர் ஆஸம் 9000 ரன்களைக் கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார். மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 271 இன்னிங்ஸ் 9000 ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1. பாபர் அசாம் : 245* இன்னிங்ஸ்,
2. கிறிஸ் கெயில் : 249 இன்னிங்ஸ்,
3. விராட் கோலி : 271 இன்னிங்ஸ்,
4. டேவிட் வார்னர் : 273 இன்னிங்ஸ்,
5. ஆரோன் பின்ச் : 281 இன்னிங்ஸ்,
ஐபிஎல் போலவே பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் 'பிஎஸ்எல்' போட்டியில் பெஷாவர் அணியின் கேப்டனான பாபர் ஆஸம், தனது அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று உள்ளார்.
2023 பிஎஸ்எல் தொடரில் 9 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 416* ரன்களை குவித்து அதிக ரன்கள் எடுத்த 2வது வீரராக இருந்து வருகிறார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 64 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 9000 ரன்களை குவித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
English Summary
babar azam breaks chris gayle T20 record