ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு விழா.. சச்சின் பங்கேற்பு!
BCCI feciliate to women's team Sachin Tendulkar participate
மகளிருக்கான 19 வயதுக்கு உட்பட்டோர் டி20 உலக கோப்பை முதன் முறையாக இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது.
இந்த தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இதில் கடந்த ஜனவரி 29ம் தேதி நடைபெற்ற ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வைத்து இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் முதன்முறையாக நடத்தப்பட்ட மகளிருக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.
டி20 உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் டி20 உலக்கோப்பையில் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்ற ஜூனியர் மகளிர் அணிக்கு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது.
அதுமட்டுமல்லாமல் டி20 உலக கோப்பை வென்ற ஜூனியர் இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ தரப்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு வழங்குவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். இன்று மாலை 6:30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் இந்த விழா நடைபெறுகிறது.
English Summary
BCCI feciliate to women's team Sachin Tendulkar participate