மகளிர் ஐபிஎல் தொடர்.. அணிகளை வாங்க பிசிசிஐ அழைப்பு...!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான அணிகளை வாங்க இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. முதலாவது பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 3ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெண்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளை வாங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் உரிமை கோரலாம் என இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ டெண்டர் விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி டெண்டர் விண்ணப்பத்தை ரூ.5 லட்சம் செலுத்தி வரும் ஜனவரி 21ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த தொகை திரும்ப வழங்கப்படாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. பெண்கள் ஐபிஎல் அணியை வாங்க விரும்பும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் விதிமுறைக்கு உட்பட்டு டெண்டர் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. அணிகளின் உரிமை கோரியதும் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஏலம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI invites to buy teams Women IPL series


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->