இனி இது போல் நடக்கக் கூடாது.!! விராட் கோலிக்கு BCCI எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியில் தகுதி பெறுவதற்கு அனைத்து வீரர்களுக்கும் யோ-யோ எனப்படும் உடல் தகுதி சோதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்திய அணி ஆசிய கோப்பை தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணி வீரர்களுக்கான யோ-யோ சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யோ-யோ சோதனையில் தகுதி பெற்று விட்டதாகவும், 17.2 மதிப்பெண்கள் பெற்று விட்டதாகவும் பகிர்ந்திருந்தார். இந்திய அணி வீரர்கள் யோ-யோ சோதனையின் போது புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண்களை பொதுவெளியில் பகிர அனுமதி இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் தனது யோ-யோ மதிப்பெண்ணை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட விராட் கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், தனது யோ-யோ மதிப்பெண்ணை பிற வீரர்களிடமும் பகிரக்கூடாது என பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI warns Virat Kohli for sharing Yo Yo score in public


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->