சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பென்ஸ் ஸ்டோக்ஸ் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

31 வயதான பென் ஸ்டோக்ஸ், 83 டெஸ்டுகள், 104 ஒருநாள், 34 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் திடீரென அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகச் சமீபத்தில் அவர் நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பது கடினமாக இருப்பதால் இம்முடிவை எடுத்ததாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அவர் விளையாடவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ben stokes retired from international oneday international cricket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->