இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் முதுகு வலியால் அவதி.. டி20 உலக கோப்பையில் இருந்து விலகல்.? - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று குரூப் 2 பிரிவில் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.இந்த போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முதுகில் காயம் அடைந்தார்.

இதனையடுத்து மைதானத்தில் இருந்து பாதியில் வெளியேறிய தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பந்த் கீப்பிங் செய்தார். மேலும் தினேஷ் கார்த்திக் முதுகில் ஏற்பட்ட காயம் குறித்து இந்திய அணி எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் காயம் குறித்து பேசிய புவனேஸ்வர் குமார் அவருக்கு முதுகு வலி பிரச்சனை இருந்தது எனக்கு தெரியும் என்றும் பிசியோ தான் அவருடைய உடல் நலம் குறித்து தெரிவிப்பார் என கூறியுள்ளார்.

இதனிடையே இந்திய அணி வரும் நவம்பர் 2ம் தேதி அடிலெய்டில் வங்கதேச அணியுடன் மோதுகிறது. இதில் விளையாட ஒரு நாள் மட்டுமே இடையில் இருப்பதால் அதற்குள் குணமடைந்தால் மட்டுமே தினேஷ் கார்த்திக் விளையாடுவார் இல்லையென்றால் ரிஷப் பந்த் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த உலகக் கோப்பையில் தினேஷ் கார்த்திக் பெரிதாக எந்த போட்டியிலும் விளையாடததால் ரிஷப் பந்த் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhuneshwar kumar speech about Dinesh Karthik back pain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->