விராட் - அனுஷ்கா தம்பதிக்கு ஆண் குழந்தை.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரராக இருந்து வருபவர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில், விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனை அந்த தம்பதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "பிப்ரவரி 15-ம் தேதி எங்கள் ஆண் குழந்தை அகாயையும், வமிகாவின் சிறிய சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சி மற்றும் மனம் முழுக்க அன்புடன், உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். 

எங்கள் வாழ்க்கையில் மிகவும் அழகான இந்த நேரத்தில் உங்கள் அனைவரின் அன்பு மற்றும் வாழ்த்துக்களை எதிர்நோக்குகிறோம். இந்த நேரத்தில் எங்களின் தனிமைக்கு மரியாதை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். அன்பும், நன்றியும், விராட் மற்றும் அனுஷ்கா" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

born boy baby in virat kholi anushka couples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->