‘பாக்சிங் டே’ மேட்ச் - அப்படி என்றால் என்ன? தெரிந்த பெயர், தெரியாத வரலாறு!
Boxing day match name reason
கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் தொடங்கும் டெஸ்ட் மேட்சை ‘பாக்சிங் டே’ மேட்ச் என்று கிரிக்கெட் உலகம் அழைக்கிறது.
இன்று கூட பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா, இந்திய தென்னாபிரிக்கா என இரு ‘பாக்சிங் டே’ மேட்ச்கள் தொடங்கியுள்ளன.
இந்த 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி என்று பெயர் வருவதற்கு பல்வேறு சுவாரஸ்யமான வரலாறுகள் உள்ளது. அது என்ன என்பது பற்றி இந்த செய்தியில் விரிவாக காண்போம்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு, கிறிஸ்துவ தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். தேவாலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த பணம் உள்ளிட்டவற்றை நன்கொடையாக செலுத்துவார்கள்.
மறுநாள் டிசம்பர் 26-ம் தேதி அன்று அந்த பெட்டியைப் பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளிய மக்களுக்கும், வறுமையில் உள்ளவர்களுக்கும் வழங்குவர். இவ்வாறு பெட்டியைத் திறக்கும் நாளைத்தான் அங்கு 'பாக்சிங் டே' என்று இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அழைக்கின்றனர்.
மேலும், தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் சீசனில் குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது சிறப்பு கிறிஸ்துமஸ் பாக்ஸ் பரிசாக வழங்கும் பழக்கம் அன்றைய காலங்களில் இருந்துள்ளது. இதுவும் இந்த 'பாக்சிங் டே' பெயர் வர காரணமாக சொல்லப்படுகிறது.
இப்படியாக இந்த பாக்சிங் டே தினத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை பாக்சிங் டே போட்டி என்று அழைக்கின்றனர்.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவில் 'பாக்சிங் டே' தினத்தில் ஏதாவது ஒரு சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டி கண்டிப்பாக நடைபெறும்.
இதேபோல் நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் பாக்சிங் டே அன்று ஏதாவது ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறும்.
English Summary
Boxing day match name reason