இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. ஆஸ்திரேலியா அணியில் இணையும் அதிரடி ஆல்ரவுண்டர்.! - Seithipunal
Seithipunal


இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து கேமருன் கிரீன் விளையாட உள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் காயத்திலிருந்து மீண்டுள்ளதால் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே, ஆஸ்திரேலியா அணியில் காயம் காரணமாக ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் டேவிட் வார்னர் விலகி உள்ளனர். இதில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 3வது டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cameron green added in 3rd test against India


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->