T20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணியில் இணைந்த அதிரடி ஆல்ரவுண்டர்.. யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலக கோப்பை கடந்த அக்டோபர் 16 தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 16 அணிகள் விளையாடுகின்றன.

இதில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில், மீதமுள்ள 4 இடங்களுக்கு முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும்,  ‘பி’ பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வாகும். இதனையடுத்து சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 22 தேதி முதல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரான ஜோஸ் இங்கிலிஷ் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்படக்கூடிய கேமரூன் கிரீன் ஆஸ்திரேலியா அணியில் இணைந்திருப்பது மேலும் பலத்தை சேர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cameron green replaced Josh inglish in T20 World Cup


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->