இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பின்னடைவு.. முக்கிய வீரர் விலகல்? - Seithipunal
Seithipunal


இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேமருன் கிரீன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நியூசிலாந்து அணியுடனான தொடரைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ளது. அதன்படி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இதில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  சமீபத்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகததால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cameron green ruled out 1st test match against India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->