டி20 உலகக் கோப்பை, 2007 முதல் 2024 வரை பட்டத்தை வென்றவர்கள் !! - Seithipunal
Seithipunal


கடந்த 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை!! டி20 உலகக் கோப்பை 2007 ஆண்டு தொடங்கியது, அந்த முதல் சீசனில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணி கேப்டனாக MS டோனி இருந்தார் 

கடந்த 2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை!! டி20 உலகக் கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வென்றது. அப்போது பாகிஸ்தான் கேப்டனாக யூனிஸ் கான் இருந்தார் 

கடந்த 2010 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை!! 2010 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக ஐசிசி கோப்பையை வென்றது. அப்போது இங்கிலாந்து கேப்டனாக பால் காலிங்வுட் இருந்தார் 

கடந்த 2012 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை!! 2012 டி 20 உலகக் கோப்பையில், வெஸ்ட் இண்டீஸ் அணி  இலங்கையை தோற்கடித்து தனது முதல் கோப்பையை வென்றது, இந்த போட்டி இலங்கையில் நடைபெற்றது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டனாக டேரன் சாமி இருந்தார் 

2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை!! 2014 டி20 உலகக் கோப்பையில் இலங்கை மீண்டும் வந்து கோப்பையை வென்றது. இந்த சீசனில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. அப்போது இலங்கை அணி கேப்டனாக லசித் மலிங்கா இருந்தார் 

2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை!! 2016 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் இங்கிலாந்தை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை கோப்பையை வென்றது. இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக டேரன் சாமி இருந்தார் 

2021 டி20 உலகக் கோப்பை!! கொரோனா தொற்றுநோய் காரணமாக, டி 20 உலகக் கோப்பையை சில ஆண்டுகள் நடத்த வில்லை, ஆனால் 2021 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை நடந்தது அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சீசனின் கோப்பையை வென்றது. அப்போது ஆஸ்திரேலியா கேப்டனாக ஆரோன் பின்ச் இருந்தார்.

2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை!! டி 20 உலகக் கோப்பை 2022 இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நடந்தது, இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி டி 20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது. அப்போது இங்கிலாந்து கேப்டனாக ஜோஸ் பட்லர் இருந்தார் 

2024 டி20 உலகக் கோப்பை!! 2024 டி20 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, தற்போது  இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. தற்போது இந்திய கேப்டனாக HIT MAN ரோஹித் சர்மா உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

champions from 2007 to 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->