சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - காரணம் என்ன?
anti corruption department raids register office
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை அதிக லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த விவரம் தெரியவரும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
anti corruption department raids register office