02 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றியுள்ள 'ரியல் ஹீரோ' ஜேம்ஸ் ஹாரிசன் காலமாகியுள்ளார்..! - Seithipunal
Seithipunal


ரீசஸ் நோயினால் பாதிப்பிற்கு உள்ளான 02 மில்லியனுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய, ஜேம்ஸ் ஹாரிசன் உடல்நல குறைவு காரணமாக தனது 88 வயதில் காலமாகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் தனது ரத்த தானம் வாயிலாக குறித்த குழைந்தைகளை காப்பாற்றியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் தெற்கு நியூ சவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹாரிசன். இவருக்கு 14 வயதில், ஒரு நுரையீரல் அகற்றப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷனுக்காக, அவருக்கு முகம் தெரியாத பலர் அளித்த 13 யூனிட்கள் ரத்த தானம் மூலம் உயிர் பிழைத்தார். தான் உயிர் பிழைத்ததற்கு நன்றி கடனாகவே அவர் ரத்த தானம் செய்வதில் விருப்பம் கொண்டிருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில், ரீசஸ் நோயினால் பச்சிளம் குழந்தைகள் அதிகம் மரணமடைந்து வந்துள்ளனர். குறித்த நோய்க்கு தீர்வு ஏற்பட ஆன்டி-டி ஆன்டிபாடி அவசியமானதாகிறது. இதனிடையே, ஹாரிசனின் ரத்த பிளாஸ்மாவில், இந்த ஆன்டி - டி ஆன்டிபாடி இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், அவர் தனது 18 வயதிலிருந்து ரத்த தானம் செய்ய அராம்பித்துள்ளார். தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரம் தடவைக்கு மேல் ரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்,

இவரது இந்த அளப்பரிய வேவையின் மூலம் செயலின் மூலம், 02 மில்லியனுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பயனடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்களில் அறிவிக்கப்பட்டது.

ஜேம்ஸ் ஹாரிசன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ரத்த தானம் அளிப்பதை அவர் நிறுத்தினார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த பிப் 17-ஆம் தேதியன்று இறந்ததாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு உருவாரும் ரீசஸ் நோய் என்பது, பெண்ணின் பிரசவ காலத்தில் தாய்க்கு, இந்நோய் இருக்கும் பட்சத்தில், பெண்ணின் ரத்தத்தில் ரீசஸ் நெகட்டிவ் (RhD negative) இருக்கும். கருவில் உள்ள குழந்தையின் ரத்தத்தில் ரீசஸ் பாசிட்டிவ் (RhD positive) ஆக இருக்கும். இவ்வாறு இருக்கும்பட்சத்தில், பெண்ணின் ரத்தம், குழந்தையின் ரத்த செல்களை அழித்து மரணத்திற்கு வழிவகுத்துவிடும்.இவ்வாறான பச்சிளம் குழந்திகளில் மரணத்தை அவர் தனது தந்து ரத்த தானம் மூலம் காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

James Harrison saved 2 million children has passed away


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->