தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்..!
Former Pakistani Prime Minister Imran Khan is in solitary confinement
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதி கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான்கான் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பெறுப்பேற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, இம்ரான்கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்நிலையில், சிறையிலிக்கும் இம்ரான்கான் தற்போது, தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
அதாவது, பயங்கரவாதிகளை அடைத்து வைக்கும் தனிமைச்சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்க வைக்க சதித்திட்டம் தீடப்படுவதாகவும் அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான்கானை 6 பேர் சந்திக்கலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தபோதும், அவரை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இம்ரான்கானை சந்திக்க அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Former Pakistani Prime Minister Imran Khan is in solitary confinement