ஐபிஎல் மினி ஏலம்.. அடிப்படை விலையில் இந்திய வீரரை தூக்கிய சிஎஸ்கே அணி.!
Chennai super kings bought Ajinkya Rahane
50 லட்சத்திற்கு இந்திய வீரர் அஜின்க்யா ரகானேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது.
இந்த மினி ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். ஆனால் இதில் 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார். அதில் 30 இடங்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களுடையது. மீதி 57 இடங்களுக்கு மட்டுமே இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தற்போது நடைபெற்று வரும் ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரோக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. இதனையடுத்து அடிப்படை விலையில் ரூ.50 லட்சத்திற்கு இந்திய வீரர் அஜின்க்யா ரகானேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
தற்போதைய வீரர்கள் ஏல விவரம்;
ஹாரி ப்ரோக் -13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
மயாங்க் அகர்வால் - 8.25 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
கேன் வில்லியம்சன் - 2 கோடி (குஜராத் டைட்டன்ஸ்)
அஜின்க்யா ரகானே - 50 லட்சம் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
English Summary
Chennai super kings bought Ajinkya Rahane