காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி.. நேற்று ஒரேநாளில் 5 பதக்கங்களை குவித்த இந்தியா.!
Common wealth india won 4 medals in yesterday
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா நேற்று 1 வெள்ளி , 4 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றது.
ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான பளுதூக்குதலின் (109 கிலோ) இறுதி போட்டியில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் இப்போட்டியில் மொத்தம் 355 கிலோ தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல், வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான ( 109+ கிலோ) பளுதூக்குதலில் இறுதி போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார்.
நேற்று ஒரே நாளில் இந்தியா 1 வெள்ளி , 4 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றது. காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 18 பதக்கங்களுடன் 7-ம் இடத்தில் நீடிக்கிறது.
English Summary
Common wealth india won 4 medals in yesterday