காமன்வெல்த் நீளம் தாண்டுதல்.. இந்திய வீரர் முரளி ஸ்ரீ சங்கர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தல்.!
Common wealth long jump murali srisankar won silver medal
காமன்வெல்த் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீ சங்கர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 7-வது நாளில் நேற்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். வெள்ளி பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கர்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
English Summary
Common wealth long jump murali srisankar won silver medal