#IPL2023 : பென் ஸ்டோக்ஸ் குறித்து CSK ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.16.5 கோடிக்கு இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான வீரர் பென் ஸ்டோக்ஸை விலைக்கு வாங்கியது.

இதனையடுத்து தற்போது நடப்பாண்டுகாண ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் தீவிரப் பயிற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ்க்கு இடது கால் முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சில போட்டிகளில் பந்து வீச மாட்டார் எனவும், பேட்ஸ்மேனாக மட்டுமே அவரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK batting coach Mike Hussey speech about Ben stokes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->