#IPL2023 || சென்னை-லக்னோ இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது..!!
CSK LSG match abandoned due to rain
ஐபிஎல் தொடரில் இன்று 45-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் கெயின்ட்ஸ் அணியும் லக்னாவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை குறிக்கின்றதால் காலதாமதமாக டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
நேற்று முன்தினம் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக குருனால் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.
முதலில் இன்னிசை தொடங்கிய லக்னோ அணி அடுத்தடுத்து விக்கேட்டுகளை இழந்து தடுமாறியது. லக்னோ அணி 19.2 ஓவரில் 7 விக்கெட் இழந்து 125 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீண்ட நேரமாகியும் மழை நிற்காததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தல ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
English Summary
CSK LSG match abandoned due to rain