#CWG2022 : ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம்.. பதக்க பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேற்றிய இந்தியா.!
CWG 2022 india medal tally table in 5th place
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான பஜ்ரங் புனியா - கனடாவின் லச்லான் மௌரிஸ் மெக்னீலை தோற்கடித்து தங்க பதக்கம் வென்றார். காமன்வெல்த்தில் இது அவருக்கு 3-ஆவது பதக்கமாகும்.
ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் தீபக் புனியா - பாகிஸ்தானின் முகமது இனாமை தோற்கடித்து தங்கம் பெற்றாா். காமன்வெல்த் போட்டியில் இவா் தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளாா்.
மகளிருக்கான 62 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் சாக்ஷி மாலிக் - கனடாவின் அனா பௌலா காடினெஸ் கொன்ஸால்ஸை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் அன்ஷு மாலிக் - நைஜீரியாவின் ஒடுனயோ ஃபொலாசேட் அடேகுரோயேவிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றாா். தனது முதல் காமன்வெல்த் போட்டியில் களம் கண்டிருந்த அன்ஷு, தனது பிறந்தநாளிலேயே பரிசாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இதுவரை 9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
English Summary
CWG 2022 india medal tally table in 5th place