காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி.. நைஜீரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா.!
CWG 2022 india qualify to final in table tennis
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்திய அணி இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் முதல் போட்டியில் இந்தியாவின் ஹர்மித் தேசாய் - சத்யன் ஞானசேகரன் ஜோடி 11 - 6, 11 - 7, 11 - 7 என்ற கணக்கில் நைஜீரியா ஜோடியை வீழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இந்தியாவின் சரத் கமல் 3-1 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார். மூன்றாவது போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் 11 - 9, 4 - 11, 11 - 6, 11 - 8 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஆண்கள் குழு டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை எதிர்கொள்கிறது.
English Summary
CWG 2022 india qualify to final in table tennis