காமன்வெல்த் போட்டி : பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு பரிசுத்தொகையினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

இங்கிலாந்தில் நடைபெற்ற 22ஆவது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஏ.சரத்கமல் மற்றும் ஜி.சத்தியன், ஸ்குவாஷ் வீரர்கள் சவ்ரவ் கோஷல் மற்றும் தீபிகா பல்லிக்கல், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற செல்வி பவானி தேவி மற்றும் இந்தியாவின் 75ஆவது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள செல்வன் பிரணவ் வெங்கடேஷ் ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ. 3.80 கோடிக்கான காசோலைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

சரத் கமலுக்கு - ரூ.1.8 கோடி

சத்யன் -ரூ.1 கோடி

சவுரவ் கோசல் - ரூ.40 லட்சம்

தீபிகா பல்லிகல் - ரூ.20 லட்சம்

 பவானி தேவி -ரூ.35 லட்சம்

பிரனவ் வெங்கடேஷ் - ரூ.5 லட்சம்

 மேலும், விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு ரூ.51 லட்சத்திற்கான காசோலைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CWG 2022 TN medal winners mk Stalin give Price amount


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->