காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி.. ஒரே நாளில் 15 பதக்கங்களை குவித்த இந்தியா.!
CWG 2022 yesterday india won 15 medals
காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்தது. நேற்று ஒரே நாளில் 4 தங்கம் உள்பட 9 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர்.
72 நாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இன்றுடன் இந்த விளையாட்டு போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் 10-வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து ரசிகர்களை குழிப்படுத்தினர்.
குத்துச்சண்டையில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை நீது கங்காஸ் இங்கிலாந்தின் டேமி ஜாட் டெஸ்டானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தின் கியரன் மெக்டொனால்டை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன், வடக்கு அயர்லாந்தின் கேர்லி மிக்நாலுடன் கோதாவை தோற்கடித்து தங்க பதக்கத்தை வென்றார்.
தடகளத்தில் இந்தியாவுக்கு நேற்று ஒரே நாளில் 4 பதக்கங்கள் கிடைத்தது.
ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப்பில் (மும்முறை தாண்டுதல்) டாப்-2 இடங்களை இந்தியர்கள் பிடித்து பிரமாதப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். அவரை விட சற்று பின்தங்கிய மற்றொரு இந்திய வீரர் கேரளாவின் அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் இந்தியாவின் சந்தீப்குமார் வெண்கலப்பதக்கம் (38 நிமிடம் 49.21 வினாடி) வென்றார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி 60 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
பெண்களுக்கான ஹாக்கியில் பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றியோடு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சரத்கமல்-சத்யன் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.
பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 61 தங்கம், 52 வெள்ளி, 52 வெண்கலம் என்று மொத்தம் 165 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என்று 49 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் உள்ளது.
English Summary
CWG 2022 yesterday india won 15 medals