காமன்வெல்த் பாரா பளுதூக்குதல்.. இந்திய வீரர் சுதிர் தங்கம் வென்று அசத்தல்.!
CWG para weight lifting sudhir won gold medal
காமன்வெல்த் பாரா-பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சுதிர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
7-வது நாளான நேற்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுதிர், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றார்.
அவர் பாரா-பளுதூக்குதலில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். காமன்வெல்த் போட்டியில் அவர் மொத்தம் 134.5 புள்ளிகளை பெற்ற நிலையில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதன்மூலம், இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
English Summary
CWG para weight lifting sudhir won gold medal