காமன்வெல்த் கலப்பு பேட்மிண்டன் போட்டி.. வெள்ளிப்பதக்கம் வென்றது இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


கலப்பு பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் 1-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியுற்று வெள்ளி பதக்கம் வென்றது. 

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்த நிலையில் கலப்பு பேட்மிண்டன் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிங்கப்பூரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்த்து நேற்று விளையாடியது.

 இந்த நிலையில், இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. மலேசிய அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்த பதக்கத்தையும் சேர்த்து இந்திய அணி இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CWG2022 Mixed badminton india won silver medal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->