#Breaking :: ஐபிஎல் 2023ல் டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்..!! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உத்தரகாண்டில் உள்ள ரூர்க்கி பகுதியில் தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் தனியாக டெல்லி நோக்கி செல்லும் பொழுது அதிகாலை 5:30 மணி அளவில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் சென்ற போது சாலை தரப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில் கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்  கார் விபத்தில் காயமடைந்ததால் அவரால் அடுத்த ஆறு மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாட முடியாது என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் நடக்கும் ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டனாகவும், ஹைதராபாத் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

David Warner appointed as Delhi team captain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->