டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த டேவிட் வார்னர்.! - Seithipunal
Seithipunal


டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது.

அதைத்தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் டேவிட் வார்னர் 89-வது அரை சதம் கடந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்தவர் என்ற புதிய சாதனை படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெயில் 88 அரை சதம், விராட் கோலி 77 அரை சதம் அடித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

David Warner most fifties in t20 cricket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->