டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை விருது.. ஐசிசி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரோக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டிருந்தது.

இதில், டிசம்பர் மாத சிறந்த வீரர்களுக்கான விருது பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரோக், பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

அதேபோல், சிறந்த வீராங்கனைகளுக்கான விருது பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்து மகளிர் அணியின் சார்லி டீன், நியூசிலாந்து மகளிர் அணியின் சுசி பேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணியின் ஆஸ்லே கார்ட்னர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

 

இவர்களிலிருந்து தலா ஒருவர் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற வாக்கு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரோக் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதேபோல் சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியா மகளிர் அணியின் ஆஸ்லே கார்ட்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

December month ICC awards Announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->