12th Man Army! பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக்! அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு மதத்திற்கு முன் தான் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பேட்டிங் பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார்.

இதுகுறித்து ஆர்சிபி அணி தனது X பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தினேஷ் கார்த்திக் ஒரு புதிய அவதாரத்தில் ஆர்சிபிக்கு திரும்பி உள்ளார். ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், வழிகாட்டியாகவும் அவர் இருப்பார். எங்கள் கீப்பரை வரவேற்கிறோம்.

நீங்கள் கிரிக்கெட்டில் ஒரு வீரரை வெளியேற்றலாம், ஆனால் கிரிக்கெட்டை அந்த வீரரிடமிருந்து வெளியேற்ற முடியாது. 12வது மேன் ஆர்மி" என்று ஆர்சிபி அணி பதிவிட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் கார்த்திக் தனது 39வது பிறந்தநாளில் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். அவரின் சில சாதனை துளிகள் சில:

ஐபிஎல்லில் 257 போட்டிகளில் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரோலில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், 26.32 சராசரி உடன் 4,842 ரன்கள் எடுத்துள்ளார்.

RCB தவிர, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , மும்பை இந்தியன்ஸ் , டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காகவும் தினேஷ் கார்த்திக் விளையாடி உள்ளார்.

தினேஷ் கார்த்திக் இதுவரை 94  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். மொத்தம் 1,792 ரன்களும், 9 அரைசதங்களும் அடித்துள்ளார். 42 சர்வதேச டெஸ்ட் இன்னிங்ஸ்களில், வங்கதேசத்திற்கு எதிரான் ஒரு சதம் உட்பட 1,025 ரன்கள் எடுத்துள்ளார். 

60 சர்வதேச டி20 ஆட்டங்களில் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக் 686 ரன்கள் குவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல் உள்நாட்டு கிரிக்கெட்டில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார். மேலும், 2006/07 மற்றும் 2020-21 இல் இரண்டு முறை கேப்டனாக சையத் முஷ்டாக் அலி டிராபி, டி20 போட்டியை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dinesh Karthik RCB mens team batting coach and mentor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->