தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு!! - Seithipunal
Seithipunal


தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த பெங்களூர் அணி லீக் போட்டிகளின் இரண்டாம் பாதியில் தொடர் 6 போட்டிகளில் வெற்றியைப் பெற்று ரன் ரேட் அடிப்படையில் அடுத்த சுற்று பிளே ஆப்க்கு முன்னேறியது.

எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணியுடன் பெங்களூர் அணி மோதியது. அது பெங்களூர் அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த முறையாவது ஐபிஎல் கோப்பையை பெங்களூர் அணி வென்று விடும் என்று நம்பிக்கையில் காத்திருந்து பெங்களூர் அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஐபிஎல் தொடர் தொடங்கி 17ஆவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் பெங்களூர் அணி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்த அடுத்த நொடியே தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதில் இருந்தே இன்னும் கிரிக்கெட் ரசிகர்கள் மீளாத நிலையில், தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தமிழக கிரிக்கெட் வீரர்கள் நலனுக்காக டிஎன்பிஎல் விளையாடி இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dinesh Karthik retired from all forms of cricket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->