மும்பை இந்தியன்ஸ் மிகவும் ஆபத்தான அணி.. அவர்கள் இறுதிப் போட்டிக்கு வரக்கூடாது.. டுவைன் ப்ராவோ.!
Dwayne Bravo fear to face final against Mumbai
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. குவாலிஃபயர் 2 போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் மே 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது குறித்து சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் ப்ராவோ பேசியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி பார்த்து நான் மிகவும் பயப்படுவேன் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் ஆபத்தான அணி.
மற்ற அணிகளை எளிதாக வீழ்த்தி விடலாம் என நான் கூறவில்லை. அனைத்து அணிகளும் ஆபத்தான அணிதான். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி நாக் அவுட் போட்டிகளில் வீழ்த்துவது மிகவும் கடினம். உண்மையாகவே நான் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்று விரும்புகிறேன். இது எனது தனிப்பட்ட விருப்பம். இறுதி போட்டிக்கு எந்த அணி வந்தாலும் அவர்களை எதிர்கொள்ள எங்களை தயார்படுத்திக் கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Dwayne Bravo fear to face final against Mumbai