'மோசமான பந்துகளை எல்லாம் அடித்து நொறுக்கக் கூடியவர் சச்சின்' - ஜேம்ஸ் ஆண்டர்சன் சிலாகிப்பு..!! - Seithipunal
Seithipunal



இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் சச்சின் டெண்டுல்கர் தான், தான் சந்தித்ததிலேயே மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார். 

இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் பேசியதாவது, " என்னைப் பொறுத்தவரை உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். இதுவரை எப்போதுமே அவருக்கு எதிராக ஒரு உத்தியை நான் வகுக்க முடிந்ததே இல்லை. 

ஆனால் சச்சினுக்கு எதிராக நான் பந்து வீசும் போதெல்லாம் ஒன்றே ஒன்று தான் நினைப்பேன் மோசமான பந்துகளை மட்டும் அவருக்கு வீசி விடக்கூடாது என்பது தான் அது. ஏனென்றால், எத்தனை மோசமான பந்தாக இருந்தாலும், அவர் சுலபமாக அடித்து நொறுக்கி விடுவார். 

இந்திய அணி பேட்டிங் வரிசையில் சச்சினை ஆட்டமிழக்க செய்து விட்டால் போதும் என்று எதிரணியினர் நினைத்த காலங்கள் எல்லாம் உண்டு. அவரை மட்டும் வீழ்த்தி வெளியேற்றி விட்டால், மைதானத்தில் ஆட்ட சூழ்நிலையே தலைகீழாக மாறிவிடும். அத்தனை சிறந்த பேட்ஸ்மேன் அவர். 

அவர் எப்போது பந்தை மிஸ் செய்வார் என்று காத்திருந்து, அவரை எல்பிடபிள்யு முறையில் அவுட்டாக்கவே நான் விரும்புவேன். ஆனால் அவர் என் முயற்சியை எல்லாம் எளிதில் முறியடித்திருக்கிறார்" என்று சிலாகித்துப் பேசியுள்ளார். 

ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 701 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதில் இந்திய விக்கெட்டுகள் 149. மற்றும் சச்சினை மட்டும் 9 முறை வீழ்த்தியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இவர் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுடன் நடந்து வரும் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England Cricketer James Anderson Speaks About Sachin Tendulkar


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->