பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் திடீர் ரத்து.? 14 வீரர்களுக்கு புதிய வகை வைரஸ் பாதிப்பு.? - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களை புதிய வகை வைரஸ் தாக்கியுள்ளது.

பாகிஸ்தானின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை தொடங்குகிறது.

பாதுகாப்பு குறைபாடு காரணமாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு விளையாட சென்றுள்ள நிலையில், இங்கிலாந்து வீரர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உட்பட 14 வீரர்களுக்கு புதிய வகை வைரஸ் தாக்கியுள்ளது. அதன் காரணமாக வீரர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் தொண்டை மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை தொடங்க உள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து அணியில் 6 வீரர்கள் மட்டுமே பயிற்சி செய்து வருகின்றனர். இதனால் நாளை போட்டி தொடங்குவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஆலோசனை செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England players affected new virus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->