இந்தியாவை காப்பி அடிப்பதற்கு கூட உங்களுக்கு அறிவு வேண்டும்...பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.இந்த 2 அணிகளுக்கு  இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்த நிலையில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பாகிஸ்தான்  தோல்விகளை சந்திப்பதற்கு உள்ளூர் கிரிக்கெட் தரமாக இல்லாததே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். எனவே அண்டை நாடான இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் தங்களுடைய உள்ளூர் கிரிக்கெட்டை முன்னேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை எனும் உள்ளூர் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது என்றும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளின் சிஸ்டங்களை பாகிஸ்தான் ஏற்கனவே காப்பி அடித்துள்ளதாக தெரிவித்த அவர்,  நமக்கு அருகில் உள்ள இந்தியாவின் சிஸ்டங்களையும் காப்பி செய்யுங்கள் என்றும், உண்மையில் அதற்கும் உங்களுக்கு கொஞ்சம் அறிவு வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவில் விரைவில் துலீப் கோப்பை துவங்க உள்ளதாகவும், இந்தியா வித்தியாசமாக தங்களுடைய அடிப்படையை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதினால் அவர்கள்  வெற்றிகரமாக செயல்படுவதாக கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Even to beat India you need knowledge Ex player advises Pakistan team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->