உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினா அணிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்றது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றனர். 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட், காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் டிசம்பர் 18ம் இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிவில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நீடித்தது. அதன் பின்னர் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

அதில், 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா வீழ்த்தி, உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதனையடுத்து உலகம் முழுவதும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்‌.

இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் இன்று தாய் நாடு திரும்பினார். அந்த வகையில் தாயகம் திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fans gave an enthusiastic welcome to the Argentina team that won the World Cup


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->