பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை விருது.. இளம் வீரர் தேர்வு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டிருந்தது.

இதில், பிப்ரவரி மாத சிறந்த வீரர்களுக்கான விருது பரிந்துரை பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரோக், இந்திய அணியின் ரவிந்திர ஜடேஜா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின்  மோட்டீ ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

அதேபோல், சிறந்த வீராங்கனைகளுக்கான விருது பரிந்துரை பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் லாரா வால்வோர்டே, இங்கிலாந்தின்  நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஆஸ்திரேலிய அணியின் ஆஷ் கார்ட்னர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரோக் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதேபோல் சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியா அணியின் ஆஷ் கார்ட்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

February month ICC awards winners


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->