உலகக்கோப்பை கால்பந்து : மொராக்கோவை வீழ்த்திய 3வது இடத்தை பிடித்த குரோஷியா.!
FIFA World Cup 2022 Croatia in 3rd place
2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர்.
அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
அதன்படி, நெதர்லாந்து, செனகல், அர்ஜென்டினா, போலந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், மொராக்கோ, குரோஷியா, பிரேசில், சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், தென் கொரியா ஆகிய 16 அணிகள் 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட் சுற்று போட்டியின் முடிவில், காலிறுதி போட்டிக்கு நெதர்லாந்து, குரோஷியா, பிரேசில், அர்ஜெண்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ ஆகிய 8 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி போட்டிகள் முடிவில், அர்ஜென்டினா, குரோஷியா, பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும், லூக்கா மோட்ரிச்சின் குரோஷியா அணியும் மோதியது.
இதில், 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றிபெற்றது. இதன்மூலம், ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் - மொரோக்கோ அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 2-0 கோல்ட் கணக்கில் வெற்றி பெற்று மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இதன் மூலம் வரும் டிசம்பர் 18ம் தேதி இரவு 8.30 நடைபெறும் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் உலககோப்பை கால்பந்து தொடரில் 3வது இடத்திற்கான போட்டி நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதல் அரை இறுதி போட்டியில் தோற்ற குரோஷியா அணியும், இரண்டாவது அறிவியல் போட்டியில் தோல்வியடைந்த மொரோக்கோ அணியும் மோதின.
இதில், குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை வீழ்த்தி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
English Summary
FIFA World Cup 2022 Croatia in 3rd place