கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடு!...இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டனுக்கு அமலாக்கத்துறை சம்மன்! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன், 1984 இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அசாருதீன் தன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார்.

தொடர்ந்து 3 உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட இவர், சூதாட்டத்தில் சிக்கியதை அடுத்து, அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதனால், நூறாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்தார்.மேலும், இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.


இந்த நிலையில், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.20 கோடிக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான  முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை  ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் சோதனை நடத்தியதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணை என்று கூறப்படும் நிலையில், முகமது அசாருதீன் பெடரல் ஏஜென்சியின் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று சம்மனில் கேட்டு கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Financial fraud in the cricket association enforcement department summons the former Indian cricket captain


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->