முதல் டி20 கிரிக்கெட் போட்டி : 11 ஓவரில் வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.  

சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில்  2-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்று தொடங்கியது.

குவாலியரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார்.  வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய  லிட்டன் தாஸ் 4 ரன்களும், பர்வேஸ் ஹுசைன் 8 ரன்களும் எடுத்தனர் .

இறுதியில் வங்காளதேச அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 128 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் வர்மா 16 ரன்களில் ரன் அவுட் ஆனார். 6 பவுண்டரிகளை விளாசிய சஞ்சு சாம்சன் 29 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 ரன்களில் கேட்ச் ஆனார். இறுதியில் 11.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி, இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First t20 cricket match india beat bangladesh team in 11 overs to win


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->