கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணச்செய்தி பொய்யா?! அதிரவைத்த ஒலங்கா! - Seithipunal
Seithipunal


ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளரும், அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று காலை (உள்ளூர் நேரப்படி) உயிரிழந்தார் என்ற செய்தி வெளியானது.

கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹீத் ஸ்ட்ரீக், தென் ஆப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்று அந்த தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வெளியான மரணச்செய்தி வதந்தி என்றும், அவர் உயிருடன் இருப்பதாக அவரே வாட்ஸ்அப்பில் தெரிவித்துள்ளாதாக, சக வீரரான ஹென்றி ஒலங்கா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் நன்றாகவும் உள்ளதாகவும். இந்த செய்தியை கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்ததாகவும். என்னை பற்றி தகவல் அனுப்பியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.


யார் இந்த ஹீத் ஸ்ட்ரீக்? சிறு தொகுப்பு!

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல், 2005-ஆம் ஆண்டு வரை ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய ஹீத் ஸ்ட்ரீக், அந்த அணிக்கு கேப்டனாகவும், தலைசிறந்த பந்துவீச்சாளராகவும் திகழ்ந்தார்.

65 டெஸ்ட் போட்டிகளில் 1,990 ரன்களும், 216 விக்கெட்டுகளும்,
189 ஒருநாள் போட்டிகளில் 2,942 ரன்களும், 239 விக்கெட்களையும் ஜிம்பாப்வே அணிக்காக எடுத்துள்ளார்.

ஜிம்பாப்வே, வங்கதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராக ஹீத் பணியாற்றியுள்ளார்.

மேலும், ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக ஹீத் பணியாற்றியுள்ளார்.

ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவரின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Zimbabwe captain Heath Streak death fake news


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->