இந்திய அணியின்பயிற்சியாளராக நான்? கௌதம் கம்பீர் நச் பதில்! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர், அதிரடி ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற தகவல்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் சிறப்பாக செயல்பட்டு, அந்த அணி கோப்பையை வெல்வதற்கு பின் மூலமாக இருந்து உதவினார்.

இந்த நிலையில், அபுதாபி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கம்பீரிடம், இந்திய அணிக்கு பயிற்சியாளராக நீங்கள் வர விரும்புகிறீர்களா? என்று ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சிரித்தபடியே பதில் கூறிய கம்பீர், "நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர விரும்பிகிறேன். நம் தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை விட எனக்கு பெரிய மரியாதை எதுவும் இருக்காது.

உலகம் முழுவதும் உள்ள 140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை விட பெரிதாக ஒன்று இருக்க முடியுமா? 

நம் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல உதவுவது நான் அல்ல. 130 கோடி இந்திய மக்கள் தான். அவர்கள் தான் இந்திய அணி உலக கோப்பை வெல்ல உதவி செய்வார்கள். 

நம் இந்திய அணிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால், இந்திய அணி நிச்சயமாக உலக கோப்பையை வெல்லும். முக்கியமாக களத்தில் நாம் அச்சமின்றி விளையாட வேண்டும்" என்று கௌதம் கம்பீர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gautam Gambhir Indian team coach 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->