ஆசிய கோப்பை | இந்திய அணி ஓகே தான், ஆனா... பீதியை கிளப்பும் கவுதம் கம்பீர்! - Seithipunal
Seithipunal


வரும் 30-ம் தேதி ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாட்டில் நடக்க உள்ளது.

இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபால், வங்கதேசம் ஆகிய  6 அணிகள் விளையாட உள்ளன.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஷிவம் துபேவை அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்று,  இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் பேட்டியில், "தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி, ஓரளவுக்கு நன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியாகவே நான் பார்க்கிறேன். 

ஆனால், அணியில் ஒரு லெக் ஸ்பின்னரை சேர்த்திருக்க வேண்டும். இந்த இந்திய அணியில் அதிக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. எனவே, ரவி பிஷ்னோய் அல்லது சஹாலை தேர்வு செய்திருக்க வேண்டும்.

பிரசித் கிருஷ்ணா தற்போது நன்றாக பந்து வீசி வருகிறார். நல்ல பார்முக்கு வந்திருக்கும் அவரை அணியில் எடுத்திருக்க வேண்டும்.

இல்லை என்றால் முகமது ஷமியை வெளியேற்றி விட்டு, ஒரு லெக் ஸ்பின்னரையாவது  தேர்வு செய்திருக்கலாம். 

அதே போல் ஷிவம் துபேவை அணியில் சேர்த்திருக்க வேண்டும். நல்ல பார்மில் இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவுக்கு பேக்-அப் வீரராக கூட அவரை வைத்திருக்க வேண்டும். 

ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த வகையிலும் பேக்-அப் வீரராக ஷர்துல் தாக்கூர் இருக்க முடியாது. அவரை அணியில் எடுத்துள்ளார்கள் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gautam Gambhir say about asia cup team india


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->